
அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga
6.4 MB
Taille de fichier
Everyone
Android 4.4+
Android OS
À propos de அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga
அதிகமான் நெடுமான் அஞ்சி (Adigaman Neduman Anji) :்: கி.வா. ஜகந்நாதன்
அதிகமான் நெடுமான் அஞ்சி (Adigaman Neduman Anji):
எழுதியவர்: கி.வா. ஜகந்நாதன்
தமிழ் இலக்கியங்களில் வீரமும் காதலும் இணைந்து ஒளிர்கின்றன. சங்க காலத்து நூல்களில் காதற் பாட்டுக்கள் ஐந்து பங்கும் வீரப்பாடல்கள் ஒரு பங்குமாக இருக்கின்றன. காதற் பாட்டுக்கள் எல்லாம் புனைந்துரைகள்; கற்பனைக் காட்சிகளை உடையன. ஆனால் வீரப் பாடல்கள் பெரும்பாலும் வரலாற்று உண்மைகளைக் கருவாகக் கொண்டவை. எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம். புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களும், தகடூர் யாத்திரைப் பாடல்களும், கொங்குமண்டல சதகப் பாடலும் இந்த வரலாற்றையறியத் துணையாக இருந்தன. அன்றியும் அதிகமான் கோட்டையின் இரகசியத்தைச் சேரனுக்கு ஒரு வஞ்சகமகள் அறிவித்தாள் என்ற செய்தி அதிகமான் வாழ்ந்த தருமபுரிப் பக்கத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவருகிறது. அதையும் பயன்படுத்திக் கொண்டேன். ஆராய்ச்சி முறையில் எழுதியதன்று இது. படிப்பவர்கள் நெஞ்சில் அதிகமான் உருவமும் செயல்களும் ஓவியமாக நிற்கவேண்டும் என்ற கருத்தோடு உரையாடல்களையும் வருணனைகளையும் இணைத்து எழுதினேன். ஆயினும் தலைமையான நிகழ்ச்சிகளுக்-கெல்லாம் ஆதாரங்கள் உண்டு: அவற்றை அடிக் குறிப்பிலே தந்திருக்கிறேன்.
ஆசிரியர் குறிப்பு: கி.வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் [1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார் [2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது [3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
உள்ளடக்கம்:
1. முன்னோர்கள்
2. அதிகமானும் ஒளவையாரும்
3. வீரமும் ஈகையும்
4. அமுதக் கனி
5. படர்ந்த புகழ்
6. ஒளவையார் தூது
7. கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்
8. இயலும் இசையும்
9. சேரமான் செய்த முடிவு
10. போரின் தொடக்கம்
11. முற்றுகை
12. அந்தப்புர நிகழ்ச்சி
13. வஞ்சமகள் செயல்
14. போர் மூளுதல்
15. முடிவு
Développeur:
Solutions multimédias Bharani
Chennai - 600 014.
Courriel: [email protected]
What's new in the latest 1.1
Informations அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga APK
Vieilles versions de அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga
அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga 1.1
Alternative à அதிகமான் நெடுமான் அஞ்சி (Adiga







Téléchargement super rapide et sûr via l'application APKPure
Un clic pour installer les fichiers XAPK/APK sur Android!