À propos de திருக்குறள்
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.
அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.
What's new in the latest 1.0.3
Informations திருக்குறள் APK
![APKPure icône](https://image.winudf.com/v2/upload/images/icon.png/image.png?fakeurl=1&w=120)
Téléchargement super rapide et sûr via l'application APKPure
Un clic pour installer les fichiers XAPK/APK sur Android!