Tentang தமிழ் சினிமா புதிர் (Tamil Cinema Puzzle)
தமிழ் நடிகர்களின் படங்களின்பெயர்களை கண்டுபிடிக்கும் ஒரு சுவாரசியமானவிளையாட்டு
தமிழ் சினிமா புதிர் - தமிழ்ப்பட நடிகர்கள் நடித்த தமிழ் படங்களின்
பெயர்களை கண்டுபிடிக்கும் சுவாரசியம் மிகுந்த ஒரு பொழுதுபோக்கு
விளையாட்டு. இவ்விளையாட்டில் பல தமிழ்ப்பட நடிகர்களின் படங்கள்
அடங்கிய ஒரு பட்டியல் இருக்கும். இப்பட்டியலிலிருந்து உங்களுக்கு
விருப்பமான நடிகரின் படத்தை தேர்வு செய்து விளையாடலாம்.
நடிகர்கள் அனைவருக்கும் அவர்கள் நடித்த படங்களுக்கு ஏற்றவாறு
நிலைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் எந்த நிலையை
வேண்டுமானாலும் உங்களுக்கு ஏற்றவாறு முதலில் தேர்வு செய்து
விளையாடலாம்.
நிலையை தேர்வு செய்த பின்னர் திரையில் தோன்றும் கட்டங்களின்
உள்ளே நீங்கள் தேர்வு செய்த நடிகர் நடித்த பத்து தமிழ் படங்களின்
பெயர்கள் ஒளிந்திருக்கும். கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மேலிருந்து
கீழ் , கீழிருந்து மேல் , இடமிருந்து வலம், வலமிருந்து இடம் மற்றும்
மூலைவிட்டங்களில் நகர்த்தி படங்களின் பெயர்களை கண்டுபிடிக்கலாம்.
உதவிக்கு திரையின் அடியில் இருக்கும் சிவப்பு நிற பொத்தானை (உதவி)
பயன்படுத்தலாம். இந்த உதவி பொத்தானை தேர்வு செய்த உடன் வரும்
விளம்பர காணொளியை முழுவதும் கண்டவுடன் படத்தின் பெயர்
திரையில் தோன்றும்.
கண்டுபிடித்த நிலைகளை மீண்டும் விளையாட நிலைகளின் திரையின்
கீழ் தோன்றும் சிவப்பு நிற பொத்தானை (அழி) தேர்வு செய்து
தகவல்களை அழிக்கலாம்.
What's new in the latest 0.5
Informasi APK தமிழ் சினிமா புதிர் (Tamil Cinema Puzzle)
Versi lama தமிழ் சினிமா புதிர் (Tamil Cinema Puzzle)
தமிழ் சினிமா புதிர் (Tamil Cinema Puzzle) 0.5

Unduh Aplikasi APKPure untuk mendapatkan lebih banyak hadiah dan diskon game
Sekali klik untuk menginstal file XAPK/APK di Android!