このதமிழ் வரலாறு-Great History of Tamilについて
私は甘い番目としてどこにでも舌タミル語を発見していないことを知って - MITS
செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர். கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய நமது செம்மொழியான தமிழ் மொழி தானாகவே தோன்றிய மொழி ஐம்பெரும் காப்பியங்களை தொரிவித்த மொழி அரமெங்கும் புறமெங்கும் வாழ்வை அழகாக வர்தனித்த மொழி ஆதி அந்தமில்லாமல் இருக்கும் மொழி எங்கள் தமிழ்மொழி.
தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [6] மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ்.
இந்த செயலியை உங்கள் நண்பர்களுக்கும்
தமிழ் பற்றாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி
அவர்களையும் சிறப்பித்து
தேன்தமிழையும் செழிக்கச்செய்வீர்.