Mahishasura Mardini Stotram 정보
'Aigiri Nandini Nanditha Medhini'는 매우 인기 있는 Durga Devi Storam입니다.
மஹிஷாசுரனை அழித்த மலையரசனின் மகளான மஹிஷாசுரமர்த்தினியே நீ இந்த உலகை மகிழ்வித்து நடந்திச் செல்பவள். சிறந்த விந்திய மலையில் உறைந்திருக்கும் உன்னை வெற்றி வீரர்கள் துதித்துப்படுபவளே அழகாப் பின்னிய கூந்தலை உடையவளே உன்னைப் போற்றுகிறேன்.
நல்லவர்களுக்கு வரங்களைக் கொடுத்துக் கொடியவர்களை அடக்கிக் கடுஞ்சொற்களைப் பொறுத்து மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே அலை மகளே, மலைமகளே மஹிஷாசுரமர்த்தினியே உன்னைப் போற்றுகிறேன்.
இந்த உலகின் அன்னையே, என் தாயே சிறந்த இமயமலையில் வீற்றிருப்பவளே தேன் போல் இனியவளே அசுரர்களை அழித்தவளே மஹிஷாசுரமர்த்தினியே உன்னைப் போற்றுகிறேன்.
நம் வாழ்விலும் செய்யும் தொழிலிலும் வேலையிலும் எதிரிகள் பலர் இருக்கக்கூடும். அவர்களை எதிர்க்கொண்டு வெற்றிப் பெற்ற, வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க துர்க்கை அம்மன் மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்வது நல்லது.