பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum)

பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum)

  • 6.5 MB

    Saiz Fail

  • Android 4.1+

    Android OS

Mengenai பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum)

பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய அறிய நூல்

பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum)

எழுதியவர்: மயிலை சீனி. வேங்கடசாமி

ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது. இப்போதைய தமிழர், ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை முற்றும் மறந்துவிட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவிட்டது.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்த மதம், தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், அல்லது உதவிகள் யாவை? பௌத்தர் தமிழ் மொழியில் இயற்றிய நூல்கள் எவை? அவற்றின் வரலாறு என்ன? இவற்றை அறியக் கருதி யாம் செய்த ஆராய்ச்சியின் பயனே இந்நூலாகும். பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினை மட்டும் ஆராய்வதே எமது முதல் நோக்கமாயிருந்தது. பின்னர், இந்த ஆராய்ச்சி, பௌத்தம் தமிழ் நாட்டில் வந்ததும், வளர்ந்ததும், மறைந்ததுமான வரலாறுகளையும் சுருக்கமாக எழுதும்படி செய்துவிட்டது. பௌத்தரால் தமிழருக்குண்டான நன்மையை ஆராய்வதே இந்நூலின் முதல் நோக்கமாகையாலும், இது தமிழ் மொழி வரலாற்றின் ஒரு பகுதியாகையாலும், இந்நூலுக்குப் பௌத்தமும் தமிழும் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

ஆசிரியர் குறிப்புகள்:

மயிலை சீனி. வேங்கடசாமி (டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

உள்ளடக்கம்:

முன்னுரை

1. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு

2. திரிபிடக வரலாறு

3. பௌத்தமதத் தத்துவம்

4. பௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு

5. பௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு

6. பௌத்த மதம் மறைந்த வரலாறு

7. பௌத்த திருப்பதிகள்

8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்

9. பௌத்தரும் தமிழும்

10. தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்

11. பௌத்தர் இயற்றிய தமிழ்நூல்கள்

12. தமிழில் பாலிமொழிச் சொற்கள்

13. புத்தர் தோத்திர பாடல்கள்

14. சாத்தனார் - ஐயனார்

15. பௌத்தமதத் தெய்வங்கள்

16. ஆசீவக மதம்

17. மணிமேகலை நூலின் காலம்

Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: [email protected]

Tunjukkan Lagi

What's new in the latest 1.1

Last updated on 2019-03-12
பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய அறிய நூல்
Tunjukkan Lagi

Video dan tangkapan skrin

  • பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) penulis hantaran
  • பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) syot layar 1
  • பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) syot layar 2
  • பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) syot layar 3
  • பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) syot layar 4
  • பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) syot layar 5
  • பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) syot layar 6
  • பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum) syot layar 7

Versi lama பௌத்தமும் தமிழும் (Bowthamum Tamizhum)

APKPure ikon

Muat Turun Super Pantas dan Selamat melalui Apl APKPure

Satu klik untuk memasang fail XAPK/APK pada Android!

Muat Turun APKPure
thank icon
Kami gunakan kuki dan teknologi yang lain pada laman web ini untuk menambah baik pengalaman anda.
Dengan klik mana-mana pautan pada halaman ini, anda bersetuju dengan Dasar Privasi dan Dasar Kuki kami.
Baca Yang Selanjutnya