Over Singapenne
Singapenne - Empowerment van vrouwen.
அரசியலில் தன் தடம் பதித்த சாதனை முதல்வர் அவர்களின் பிறந்த தினமான இன்று முப்பரிமாண மகளிர். மேம்பாடு செயலி உருவாக்கி மகளிர் மேம்பாட்டிற்கு பணியாற்றுவதில் பெறு மகிழ்ச்சி அடைகின்றோம்.
அம்மா அவர்களின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு. சட்ட வழிகாட்டல் தொழில் வழிகாட்டல் தொட்டில் குழந்தைத் திட்டம், திருமணத்திற்கான தங்கம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன அதனைத் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர். எடப்பாடி அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க அரசு மகளிர் மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக மேம்படுத்தி வருகிறது.
இப்புதிய மகளிர் மேம்பாட்டு செயலி ஒரு முப்பரிமாண செயலியாகும். கல்வி, சட்டம், என்ற நிலைகளில் மகளிருக்கான கற்றல் கற்பித்ததல், ஆலோசனைகள் பயிற்சிகள், வேலை வாய்ப்புகள் என பன்முகங்களின் மகளிரை மேம்பட வைக்கும் சாதனைச் செயலி 'சிங்கப்பெண்ணே' .
சிங்கப்பெண்ணே என்ற செயலியின் முக்கிய அம்சங்களில் முதல் அம்சம் பெண்களுக்கான கல்வி. பெண் கல்வியும் ஆளுமைத் திறமும் ஒரு சமூகத்தை மட்டுமல்ல ஒரு சகாப்பத்தை உருவாக்கும் என்பதற்கு புரட்சி தலைவி அம்மா அவர்களே தலை சிறந்த எடுத்துகாட்டு.
எல்லா வயது மகளிருக்குமான ஏட்டுக்கல்வி முதல் தொழில்நுட்ப கல்வி கலை சார்ந்த கல்வி ஆகிய அனைத்தும் கற்றுத்தருவதோடு செயலி வழியாக கேட்கப்படும் வினாக்களுக்கு சிறந்த விளக்கங்களை அளிக்கின்றது. மேலும் கல்விசார் ஆலோசனைகளையும் சிறப்பாக வழங்குகிறது. மேலும் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி மகளிரின் திறன்களுக்கேற்ப வேலை வாய்பினைப் பெற்றுதருகிறது.
இரண்டாவது, மூன்றாவது சட்ட ஆலோசனை, மகளிர் எதிர்நோக்கும் பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்குகிறது. மேலும் மகளிருக்கான பல்வேறு சட்டங்களை விரிவாக விளக்கமாக எடுத்துரைக்கின்றது.
சிங்கப்பெண்ணே என்ற செயலி உருவாக ஆலோசனை வழங்கி வழிகாட்டியவர் உழைப்பாலும் உண்மையாலும் உன்னத சேவையாலும் எல்லோரும் விரும்பும் நாயகனாகத் திகழ்ந்து வரும் மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் அண்ணன் வேலுமணி. அண்ணனின் வழிகாட்டுதலில் இச்செயலியை உருவாக்கித்தந்தவர் கோவை மாவட்ட. அ.இ.அ.தி.மு.க இளைஞர் அணியின் இணை செயலர் GESA அமைப்பின் முதன்மை செயல்பட்டு அதிகாரி, 'அம்மா' வின் ஆசி பெற்று சமூகத்திற்கும் குறிப்பாக மகளிர் மேம்பாட்டிற்குமான பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த திட்டச்செயலிகளை அடித்தட்டு மக்கள் முதல் எல்லா வகையினருக்குமான திட்டங்களை உருவாக்கித் தந்த சேவை மனப்பான்மைக் கொண்ட சாதிக்கு ஆளுமை திறம் கொண்ட சிங்கப்பெண் திவ்யா சண்முகம்.
பயன்கள் :
இம்முப்பரிமாண செயலியினை பதிவிரக்கம் செய்வதனால் பல்லாயிரகணக்கான பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்பினை பெறுவதற்கு உடல், உள்ளம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆலோசனைகளைப் பெற்று திறம் மிக்க சாதனைப் பெண்ணாக உருவாக இச்செயலி பெரும்பங்காற்றும் .
What's new in the latest 1.1.5
Singapenne APK -informatie

Supersnel en veilig downloaden via de APKPure-app
Eén klik om XAPK/APK-bestanden op Android te installeren!