Nov 15, 2022 tarihinde güncellendi
தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.