關於மூலிகை மருந்துகள்
Noyanuka規範中藥材,治療 - 破解.S珍珠
நோயணுகா நெறிகளும் எளிய முறையில் மூலிகை மருந்துகளும் எனும் இச்சிறு நூலில், ஆசிரியர் சு முத்து அவர்கள், நோய் வராமல் தடுக்கும் முறைகளை விவரமாக கூறியுள்ளர். மேலும், நோய் வந்தால் சிகிச்சை செய்ய, கிட்டத்தட்ட 150 - க்கும் மேற்பட்ட மூலிகைகளையும், தினசரி உபயோகிக்கும் பொருட்களையும், பல்வேறு நோய்களை தீர்க்க, அவைகளின் உபயோகமும், செய்முறைகளும் விரிவாக விளக்கியுள்ளர். நகரங்களில் சுலபமாக கிடைக்கும் பொருட்களும், சில நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடைச் சரக்குகளையும், உபயோகித்து, அடிக்கடி வரும் எளிய நோய்களுக்கு, அதிக செலவில்லா, சிரமமில்லா சிகிச்சைகள் கூற்ப்படுள்ளன.
அனைவருக்கும் மிகவும் உபயோகமானதொரு நூல். நோயை தீர்ப்பதை விட நோய் வராமல் தடுப்பது முக்கியம். ஆதலால், இதில் உள்ள குறிப்புகளைக் கொண்டு நோய் வராமல் தடுப்பது, தவறியும் வந்தால் சிகிச்சையும் எளிது. சிறிய நோய்களை ஆரம்பத்திலேயே கவனித்தால், பெரிய நோய்கள் வராமல் தடுப்பதும் சுலபம். ஆசிரியரின் சேவை மனப்பான்மையால் அனைவரும் பயன்பெற அவரது குடும்பத்தினர் இதனை இலவசமாக வெளியிட அனுமதியளித்துள்ளனர்.



