關於100 best tamil short stories
எஸ்ராபரிந்துரைத்த100சிறுகதைகள்தொகுப்புசென்ஷி。
எஸ்ரா பரிந்துரைத்த 100 சிறுகதைகள், தொகுப்பு சென்ஷி.
நன்றிகள்: சென்ஷி மற்றும் அழியாச் சுடர்கள்.
ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இளம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு -எஸ்.ராமகிருஷ்ணன்
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே