關於Premium Tamil
வீட்டிலிருந்துதான்அனைத்தும்துவங்குகிறது,எனவேவீட்டுஇன்ஷூரன்ஸில்
வீட்டிலிருந்துதான் அனைத்தும் துவங்குகிறது, எனவே வீட்டு இன்ஷூரன்ஸில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்! இன்ஷூரன்ஸ் அட்வைசர்கள் பெரும்பாலும் புறக்கணித்துவிட்ட எளிதான ஆனால் மிகப் பெரிய வாய்ப்பைப் பற்றி பிரீமியம் தமிழ் உங்களுக்கு கூறுகிறது. உங்கள் ப்ராஸ்பெக்டுகளை வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கான எட்டு வழிமுறைகளை எடுத்துச் சொல்கிறார் திரு. ஜிம் ரூட்டா. வாடிக்கையாளரிடம் சரியான கேள்விகளைக் கேட்டு அவரது தேவைகள் என்ன என்பது பற்றிய சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென்று டாக்டர் ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரரின் நாமினியின் உரிமைகளுக்கும் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை எப்படி தெளிவாக வரையறுப்பது என்று திரு. ஆர். கொபிநாத் கூறுகிறார்... இவை மட்டுமல்ல, உங்களுக்குத் தேவையான மேலும் பல தகவல்கள் பிரீமியம் தமிழ் ஜூன் 2013 இதழில்!
SEPTEMBER 2013: பிரீமியம் தமிழ் இதழில் கே. நித்ய கல்யாணி விவரித்திருப்பதைப் போல் விற்பனைக்கான மாபெரும் வாய்ப்புக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் மற்றவர்கள் அந்த வாய்ப்பை பறிப்பதற்கு முன் நீங்கள் அவற்றை பெற வேண்டும்! மக்கள் மீது கவனம் செலுத்தி எப்படி மார்க்கெட்டில் எளிதாகத் தனி இடத்தைப் பிடிக்கலாம் என்று திரு. ஜிம் ரூட்டா விவரிக்கிறார். இன்ஷூரன்ஸை வாங்குபவர்களுக்கு எதிராக பல்வேறு சூழ்நிலைகளில் இன்ஷூரன்ஸ் ஆம்பட்ஸ்மேன் தீர்ப்பளிப்பதற்கு உங்கள் வாடிக்கையாளர் தகவல்களை சரியாக அளிக்காததுதான் காரணமென்று டாக்டர். ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகிறார். திரு. ஆர். கோபிநாத் பாலிசிதாரர் தனது இன்ஷூரன்ஸ் ஏஜென்டையே பொறுப்பாளராக நியமிப்பதை ஒரு உதாரணமாக அளிக்கிறார்! இது மட்டுமல்லாமல் மேலும் சுவாரஸ்யமான பல தகவல்கள் உங்களுக்காக!