关于திருக்குர்ஆன் (Quran in Tamil)
来 Google Play 网购吧!购买内容之后,立刻就可以在您的 Android 手机或平板电脑上享用,摆脱一切同步烦恼。
திருக்குர்ஆன் (Koran in Tamil) (தமிழ் குர்ஆன்)
குரான் அல்லது திருக்குரான்(குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது. ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நான்கு வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.
முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித் என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான் காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன.
பெயர் விளக்கம்
திருகுர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டது என்பது பொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமான பகுத்தறிவான், வேதங்களின் தாய், வழிகாட்டி, ஞானத்தின் திறவுகோல், நினைவு கூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பல பெயர்களிலும் திருகுர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அரபு உச்சரிப்பில் கிதாப் (புத்தகம் அல்லது வேதம்) என அழைக்கப்படுகின்றது.
திருகுர்ஆனின் அமைப்பு
திருகுர்ஆன், இயல்பில் ஒரு ஒலி வடிவ தொகுப்பு ஆகும். இது அவ்வாறே முகம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவரிற்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் காரணமாக தன்னிலை மற்றும் படர்க்கை சொற்கள் ஒரே வசனத்தில் ஒருங்கே பல இடங்களில் வருகின்றன. மேலும் சில வசனங்கள் அழுத்தற்காக பல இடங்களில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளன.
திருகுர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன. இவை அளவில் ஒத்ததாக இல்லாமல் சில மிகவும் சிறியதாகவும், சில மிகவும் பெரியதாகவும் உள்ளன. பொதுவாக இவற்றில் மெக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை நம்பிக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம், உலக இறுதி ஆகியவற்றை பற்றியும், மதினாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை பற்றியும் அதிகம் பேசுகின்றன.
திருகுர்ஆனின் உள்ளடக்கம்
திருகுர்ஆன் அடிப்படையில் முகம்மது நபியால் பல்வேறு காலங்களில் கூறப்பட்ட வசனங்களின் தொகுப்பு ஆகும். இவை அரபி மொழியில் ஆயத்து என அழைக்கபடுகின்றன. இவ்வாறான ஒத்த வசனங்களின் தொகுப்பு அத்தியாயம் ஆகும். இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 114. இவை அரபியில் சூரா என அழைக்கப்படுகின்றன. இவற்றின் பெயர்கள், குறிப்பிட்ட அத்தியாயத்தின் மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகின்றன.
திருகுர்ஆனின் தோற்றம்
முகம்மது நபி தனது ஓய்வு நேரங்களில் மெக்காவின் அருகில் இருக்கும் கிரா குகையில் தியானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளில் குகையில் இருந்து திரும்பி வந்த முகம்மது தனது மனைவி கதீசாவிடம், தன்னை குகையில் சந்தித்த ஒரு வானவர் தனக்கு இறைவனின் செய்தியை அறிவித்ததாக கூறினார். அவ்வாறு அவர் அறிவித்ததாக கூறிய செய்தியே திருகுர்ஆனின் தொடக்கம் ஆகும். அன்று தொடங்கி தனது இறப்பு வரையில் சுமார் 23 வருடங்கள் அவர் இவ்வாறான இறைவசனங்கள் கிடைக்கப் பெறுவதாக கூறினார். ஆனால் இவ்வாறு கூறப்பட வசனங்கள் வரிசைக்கிரமமாக கூறப்படவில்லை. முன்னும் பின்புமாக பல வசனங்கள் இருந்தன. பின் அவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் எனபதையும் முகம்மது நபியே கற்பித்தார். வானவர் யிப்ரயீலே தனக்கு இதை கற்பித்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர் இதை தனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி செல்வதாகவும் முகம்மது நபி கூறினார்.
ஒட்டகத்தின் எலும்பில் எழுதப்பட்ட திருகுர்ஆனின் வசனங்கள்