关于Aadum Karagam
ஆடும்கரகம்என்றபாடலைப்பிரபலபின்னணிபாடகிதிருஎல்ஆர்ஈஸ்வரிபாடியுள்ளார்。
ஆடும் கரகம் எடுத்து உன் முன் நாங்கள் ஆடி வருவோம்.
அம்பிகையே உன் புகழை இந்த ஊர் முழுவதும் நாங்கள் பாடி வருவோம்.
ஆடியிலே உனக்குப் பூசை வைத்து நாங்கள் அடி பணிவோம்.
உன் ஆலயத்தின் முன் வாசலிலே நாங்கள் கூடி மகிழ்வோம்.
நாங்கள் பூவால் கரகம் எடுத்து உன் முன் ஆடி வருவோம்.
இந்தப் பூலோக மாரி உனக்கு நாங்கள் மாலை இடுவோம்.
நாங்கள் பூவால் கரகம் எடுத்து உன் முன் ஆடி வருவோம்.
இந்தப் பூலோக மாரி உனக்கு நாங்கள் மாலை இடுவோம்.
தங்க கரகம் எடுத்து ஆடி வருவோம்.
வீர பத்ரகாளி உனக்கு பொங்கல் இடுவோம்.
பல வண்ண பூவால் செய்த கரகம் எடுத்து உனக்கு முன் ஆடி வருவோம்.
சமயபுர சக்தியே உன்னைப் போற்றி வருவோம்.
இருக்கிறதிலே நல்ல சந்தன கரகம் எடுத்து உனக்கு முன் ஆடி வருவோம்.
இருப்பதிலே நல்ல சந்தன கரகம் எடுத்து உனக்கு முன் ஆடி வருவோம்.
வேதபுரம் தேவியே உன்னைத் தேடி வருவோம்.
நாங்கள் வேப்பிலை கரகம் எடுத்து வணங்கி வருவோம்.
பூவால் கரகம் எடுத்து உன் முன் ஆடி வருவோம்.
இந்தப் பூலோக மாரி உனக்கு நாங்கள் மாலை இடுவோம்.
நாங்கள் வெள்ளி கரகம் எடுத்து உன் முன் ஆடி வருவோம்.
எங்கள் கண்ணபுரம் திரு சூலியே உந்தன் அருள் பெறுவோம்.
வெள்ளி கரகம் எடுத்து உன் முன் ஆடி வருவோம்.
எங்கள் கண்ணபுரம் திரு சூலியே உந்தன் அருள் பெறுவோம்.
நாற்காமலை அன்னையே உன்னையே நாங்கள் நாடி வருவோம்.
நமக்கு நல்ல நன்மை எல்லாம் கூடி வந்து நாம் நலம் பெறுவோம்.
நமக்கு நல்ல நன்மை எல்லாம் கூடி வந்து நாம் நலம் பெறுவோம்.
நாம் நலம் பெறுவோம்.