دربارهی Mahamayi Samayapura Thaye
எல் ஆர் ஈஸ்வரி பாடிய மகமாயி சமயபுரத்தயே பாடல் பக்தர்கள் பலரைக் கவர்ந்துள்ளது
மகமாயி சமயபுரத்தயே என்கின்ற பக்தி பாடலைப் பிரபல திரைப்பட பின்னணி பாடகி எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் தன்னுடைய இனிமையான குரலில் பாடியுள்ளார். இப்பாடலில் சமயபுரத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள அம்மன் கோவில் வீற்றிருக்கும் மகமாயி சமயபுரத்தாயின் அருள் பெற பக்தர்கள் போற்றிப் பாடுகிறார்கள்.
இப்பாடலில் பக்தர்கள் சமயபுரம் கோவிலுக்குச் சென்று உன்னையே நாங்கள் நம்புகிறோம் இங்கு உன் கோவிலில் அருளைப் பெற்றுக் கொள்ள ஆவலாகத் தேடி வந்து உள்ளோம். எங்களைக் கைவிடாமல் காத்துக் கொள்ள வேண்டும் எங்கள் தாயே.
ஒரு மகள் தன் தாயை எப்படி நம்புவாளோ அதைப் போன்று உன்னை நம்பி வாழ்கின்றோம். உன் மகளாகிய எனக்கு எல்லாம் நீ தான் என் தாயே. சமயபுரத்தில் உள்ள கொள்ளிட ஆற்றங்கரையில் அமைந்துள்ளது உன் கோவில் கொடுக்கப்படும் குங்குமத்தில் திலகமிட்டு வரும் மங்கையருக்குக் கிடைக்கும் உன் காவல் எங்களுக்குப் போதும்.
கண் கொடுக்கும் கண்ணபுர தேவியே எங்களுக்கு அருள் தருவாய் இமையமலையில் வீற்றிருக்கும் செல்வியே. நீ மூவிலை வேலை உன் கையில் கொண்ட காளியே. எங்களுக்கு விரோதமாக இருக்கும் பகையை முடிவுக்குக் கொண்டு வரும் முத்துமாரியே.
வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு அது வினைகளை எல்லாம் தீர்க்க அமைத்துள்ள நீ வசிக்கும் கூடு. அம்மா நீ கொடுக்கும் திருநீறு தான் எங்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. அதைப் பூசினால் உடனடியாக எல்லாம் நோய்களும் பறந்தோடும் நல்ல குணமாக்கும் சக்தி அதில் உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.
என்னைப் பெற்றவளே நீ நன்கு அறிவாய் உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை. நான் கற்ற கலை சிறு துளியே எனக்கு அதைக் கடல் பெரியதாக்கிய புகழ் உன்னையே சேரும்.
جدیدترین Mahamayi-mm چه خبر است
اطلاعات Mahamayi Samayapura Thaye APK

دانلود فوق سریع و ایمن از طریق برنامه APKPure
برای نصب فایل های XAPK/APK در اندروید با یک کلیک!