சமணமும் தமிழும்  (Samanamum Ta

சமணமும் தமிழும் (Samanamum Ta

  • 7.4 MB

    Ukuran file

  • Everyone

  • Android 4.1+

    Android OS

Tentang சமணமும் தமிழும் (Samanamum Ta

சமணமும் தமிழும் (Samanamum Tamizhum) - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய அறிய நூல்

சமணமும் தமிழும் (Samanamum Tamizhum)

எழுதியவர்: மயிலை சீனி. வேங்கடசாமி

சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ,், “ஊழ்” இதனை இது காறும் வெளிவராமல் செய்துவிட்டது! பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940 ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் னும்னும் இந் நூலை எழுதத் தொடங்கினேன். அப்போது சில நண்பர்கள் "பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்?" என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் வேற்றுமை தெரியாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள், "காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். இப்படிக் கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். திருப்பருத்திக் குன்றத்தில் இருப்பது புத்தர் கோயில் அன்று; ஜைனக்கோயில் என்று விளக்கியபோது தான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு தெரியவில்லை யென்றால், பாமர மக்களைப்பற்றிக் கூறவேண்டியதில்லையே. ,்காலத்தில், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டிலே தலைசிறந்திருந்த சமணசமயம் இப்போது மறக்கப்பட்டு விட்டது. சமணசமய வரலாறும், சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின. அது மட்டுமன்று, சமண சமயத்தின்மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. றை்றை-யெல்லாம் கண்டபோது தமிழ் நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதிமுடிக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயிற்று. இன்னொரு காரணமும் உண்டு. ,்னவென்றால், தமிழ்நூல்களைப் படிக்கும் போதும் தமிழ் இலக்கிய வரலாற்போதும் சமணசமயத்தவர், தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமய வாழ்க்கையில் பெரும் பங்குகொண்டிருந்து, தமிழ் மொழியை வளப்படுத்திய சமணசமய வரலாற்றை எழுதவேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந் நூலை்.

ஆசிரியர் குறிப்புகள்:

மயிலை சீனி. வேங்கடசாமி (டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். மகா் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். ,்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். ,்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். து்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார்.

உள்ளடக்கம்:

முன்னுரை

1. சமணசமயம் தோன்றிய வரலாறு

2. சமணசமய தத்துவம்

3. சமணமுனிவர் ஒழுக்கம்

4. ஆருகதரின் இல்லற ஒழுக்கம்

5. சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு

6. சமணசமயம் சிறப்படைந்த வரலாறு

7. .்போர்

8. சமணசமயம் குன்றிய வரலாறு

9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்

10. சமணத் திருப்பதிகள்

11. தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்

12. ஆறுவகையான உயிர்கள்

13. வடக்கிருத்தல்

14. சமணசமயத்தில் மகளிர்நிலை

15. சில புராணக்கதைகள்

16. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள்

17. ஆருகத மதத்தை 'இந்து' மதத்தில் சேர்க்க முயன்றது

18. சமணசமயப் புகழ்ப்பாக்கள்

Pengembang:

Solusi Multimedia Bharani

Chennai - 600 014.

Email: [email protected]

Tampilkan Selengkapnya

What's new in the latest 1.1

Last updated on 2019-03-12
சமணமும் தமிழும் (Samanamum Tamizhum) - மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய அறிய நூல்
Tampilkan Selengkapnya

Video dan tangkapan layar

  • சமணமும் தமிழும்  (Samanamum Ta poster
  • சமணமும் தமிழும்  (Samanamum Ta screenshot 1
  • சமணமும் தமிழும்  (Samanamum Ta screenshot 2
  • சமணமும் தமிழும்  (Samanamum Ta screenshot 3
  • சமணமும் தமிழும்  (Samanamum Ta screenshot 4
  • சமணமும் தமிழும்  (Samanamum Ta screenshot 5
  • சமணமும் தமிழும்  (Samanamum Ta screenshot 6
  • சமணமும் தமிழும்  (Samanamum Ta screenshot 7

Versi lama சமணமும் தமிழும் (Samanamum Ta

ikon APKPure

Pengunduhan Super cepat dan aman melalui aplikasi APKPure

Sekali klik untuk menginstal file XAPK/APK di Android!

Unduh APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies