About சித்த மருத்துவச் சுடர்
Rare complete paranormal medical book won the first prize of the Government of Tamil Nadu
இதில் கீழ்க்கண்ட நூல்கள் உள்ளன.
1. சரபேந்திர சித்த மருத்துவச் சுடர்
2. ஆத்மரட்சாமிர்த வைத்திய சாரசங்கிரகம்
3. ஜீவரக்ஷாமிர்தம்
முதல் நூல் சித்த வைத்திய தத்துவந் தொடங்கி, உணவு வகைகளைப் பற்றி கூறி, பல்வேறு நோய்களின் பிரிவுகள், குறி, குணம் ஆகியவைகளை விவரித்து, அதற்கான பல்வேறு மருந்து செய்முறைகளைக் கூறி, விஷக்கடியில் முடிகிறது. நூலில் 700க்கும் அதிக பக்கங்கள் உள்ளன. இது தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல். சித்த மருத்துவம் பற்றிய விளக்கங்களும், மருந்து செய்முறைகளும் ஒருங்கே தரும் ஒரே நூலாகும்.
இரண்டாவது நூலில், நோய் வரிசையில் நூலைத் தொகுத்து, பல்வேறு நோய்களின் குறி குணம் ஆகியவகைகளைக் கூறி அதற்கு சிகிச்சை முறைகளை விவரிக்கிறது. நூல் மிக விரமாக உள்ளது. 500க்கும் மேல் பக்கங்களைக் கொண்டது.
முன்றாவது நூல், நோய்களின் குறி குணம், அவைகளின் பிரிவுகள் ஆகியவைகலை விவரமாகக் கூறி, அவைகளின் சாத்தியாசாத்தியம், சுருக்கமாக அவைகளுக்காகும் மருந்துகளின் பெயர்களைக் கூறி தமிழ் சித்தர் நூல்களிலிருந்து சில விவரங்களை ஆயுர்வேதத்துடன் ஒப்பிடுகிறது.
இம்மூன்று நூல்களும், மருத்துவர்களுக்கு மிகவும் உபயோகமான நூல்களாகும். நோய்களைப் பற்றிய விவரங்களை சித்த மருத்துவ அடிப்படையிலும், ஆயுர்வேத அடிப்படையிலும் பாரத்து கடினமான நோய்களை தீர்க்கலாம்.
மருத்துவர் அல்லாதோர், இந்நூல்களிலிருந்து, சித்த மருத்துவம் பற்றியும், நோய்களைப் பற்றிய அறிவும், அவைகளின் சாத்தியாசாத்தியத்தையும் அறிந்து சிகிச்சைக்கான முடிவுகளை எடுக்கலாம். மேலும், அநேக இலகுவான சிகிச்சை முறைகளை பாட்டி வைத்தியம் போல் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
இம் மென்பொருளை உபயோகித்து அனைவரும் நோயின்றி வாழ நமது பிராத்தனைகள்.
ஓம் நமோ நாராயணா.
What's new in the latest 1.0
சித்த மருத்துவச் சுடர் APK Information

Super Fast and Safe Downloading via APKPure App
One-click to install XAPK/APK files on Android!