Über Dhanvantari 108 Potri
Dhanvantari 108 Potri von Veeramani Kannan & Gayathri Mantra
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் திருப்பாற்கடலில் தோன்றியவனே (உதித்தவரே) போற்றி
ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
ஓம் துன்பத்தைத் துடைப்பவனே போற்றி
ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
ஓம் அபயம் அளிப்பவனே போற்றி
ஓம் அன்பு கொண்டவனே போற்றி
ஓம் அமரனே போற்றி
ஓம் நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் அமரப்பிரபுவே போற்றி
ஓம் அருளை வாரி வழங்குபவனே போற்றி
ஓம் அடைக்கலம் கொடுப்பவனே போற்றி
ஓம் அழிவற்றவனே போற்றி
ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
ஓம் அமிர்த கலசம் ஏந்தியவனை போற்றி
ஓம் அமிர்தத்தை உற்பத்தி செய்தவனே போற்றி
ஓம் அமிர்தமானவனே போற்றி
ஓம் அனைத்தையும் அறிந்தவனே போற்றி
ஓம் ஸ்ரீ பிணிகள் தீர்க்கும் தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஆயுர்வேதத்தின் தந்தையே போற்றி
ஓம் ஆயுர்வேதத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆயுர்வேதமே போற்றி
ஓம் ஆயுர்வேதத்தின் அதிபதியே போற்றி
ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
ஓம் ஆயுதக் கலை நிபுணனே போற்றி
ஓம் ஆத்மபலம் தருபவனே போற்றி
ஓம் ஆசாபாசம் அற்றவனே போற்றி
ஓம் ஆனந்த ரூபனே போற்றி
ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
ஓம் ஆற்றல் பெற்றவனே போற்றி
ஓம் நோய் நொடிகள் தீர்க்கும் தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் உலகினைக் காக்கும் ரட்சகனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் திரிலோக சஞ்சாரியே போற்றி
ஓம் உலகை ஆள்பவனே போற்றி
ஓம் உலகத்தைக் காத்தருள்பவனே போற்றி
ஓம் உயிர் காப்பவனே போற்றி
ஓம் உலக மக்களால் பூஜீக்கப்படுபவனே போற்றி
ஓம் உயிர் காக்கும் உறைவிடவே போற்றி
ஓம் உயிர்களைக் காப்பவனே போற்றி
ஓம் உண்மையான சாதுவே போற்றி
ஓம் சர்வலோக நிவாரண தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கருணை அமிர்த கடலே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் காக்கும் தெய்வமே போற்றி
ஓம் காத்தருள் புரிபவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காவிரியில் ஸ்னானம் செய்பவனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
எங்களை நோயில் இருந்து விடுவிக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சகல நன்மைகளைத் தருபவனே போற்றி
ஓம் சகல செல்வங்களையும் வழங்குபவனே போற்றி
ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
ஓம் ஸ்ரீ மகா தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சர்வ மங்களம் அளிப்பவனே போற்றி
ஓம் சந்திரனின் சகோதரனே போற்றி
ஓம் சிறந்த ஆற்றல் கொண்டவனே போற்றி
ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
ஓம் சிறந்த அறநெறியோனே போற்றி
ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவனே போற்றி
ஓம் சுகம் அளிப்பவனே போற்றி
ஓம் சுகபோக பாக்யம் தருபவனே போற்றி
ஓம் சுகம் தருபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் தச அவதாரமே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தெய்வீகமே போற்றி
ஓம் தெய்வீக மருந்தே போற்றி
ஓம் தெய்வீக மருத்துவனே போற்றி
ஓம் தேகபலம் தருபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவர்களால் வணங்க படுபவனே போற்றி
ஓம் தேவ அமிர்தமே போற்றி
ஓம் தேனா அமிர்தமே போற்றி
ஓம் ஸ்ரீ மகா தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் பகலவனே போற்றி
ஓம் பக்திமயமானவனே போற்றி
ஓம் பண்டிதர்களின் தலைவனே போற்றி
ஓம் பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் ஸ்ரீ மகா விஷ்ணு அம்சமே போற்றி
ஓம் பாத பூஜைக்குரியவனே போற்றி
ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் பூர்ண புருஷனே போற்றி
ஓம் பூஜிக்கப் படுபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் மகா வைத்தியரே போற்றி
ஓம் மகா மேதாவியே போற்றி
ஓம் ஸ்ரீ மகா விஷ்ணுவே போற்றி
ஓம் முக்தி தரும் குருவே போற்றி
ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சக்தியே தன்வந்திரி பகவானே போற்றிப் போற்றிப் போற்றி
What's new in the latest Dhanvantari-dv
Dhanvantari 108 Potri APK -Informationen
![APKPure Zeichen](https://image.winudf.com/v2/upload/images/icon.png/image.png?fakeurl=1&w=120)
Superschnelles und sicheres Herunterladen über die APKPure-App
Ein Klick zur Installation von XAPK/APK-Dateien auf Android!