Thiruvarutpa Songs
17.3 MB
Rozmiar Pliku
Android 4.4+
Android OS
O Thiruvarutpa Songs
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருவருட்பிரகாசவள்ளலார் (எ) சிதம்பரம் இராமலிங்க அடிகள்
திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக (இத்தொகுப்புகள் திருமுறை எனவும் அவரது தொண்டர்களால் வழங்கப்படுகின்றன, எனினும் சைவத்திருமுறைகளான பன்னிரெண்டு திருமுறைகள் வேறு). தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்கவேண எனினும், வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றனர்.
வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்:
1. சிறந்த சொற்பொழிவாளர்.
2. போதகாசிரியர்.
3. உரையாசிரியர்.
4. சித்தமருத்துவர்.
5. பசிப் பிணி போக்கிய அருளாளர்.
6. பதிப்பாசிரியர்.
7. நூலாசிரியர்.
8. இதழாசிரியர்.
9. இறையன்பர்.
10. ஞானாசிரியர்.
11. அருளாசிரியர்.
12. சமூக சீர்திருத்தவாதி.
13. தீர்க்கதரிசி.
14. மொழி ஆய்வாளர் (தமிழ்).
எம்மத நிலையும் நின் அருள்
நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ? செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன்
எந்தாய்
—திருவருட்பா, ஆறாம் திருமுறை, 3639
கரைவின் மாமாயைக் கரும்பெருந்திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பேருறுநீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர்மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பச்சைத்திரையாற் பரவெளி அதனை
அச்சுறமறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
செம்மைத்திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி பொன்மைத்திரையாற்பொருளுறுவெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
வெண்மைத்திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
கலப்புத் திரையாற்கருதனுபவங்களை
அலப்புறமறைக்கும் அருட்பெருஞ்ஜோதி.
- அருட்பெருஞ்ஜோதி அகவல் 813-826
பெருமானார் சத்தியஞானசபையை இயற்கை விளக்கம் என்பார். அகத்தே காணற்குரிய அனுபவத்தைப் புறத்தே பாவனையாகக் காட்டுவதே சத்திய ஞானசபை. திரைகளெல்லாம் தத்துவப் படலங்களே, மாயா திரைகளே. நம்மிடத்திலுள்ள அஞ்ஞானமாகிய திரைகள் நீங்கப் பெற்றால் ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்கலாம். அகத்தே தாம் பெற்ற அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தையே புறத்தில் சபையாகக் காட்டினார் பெருமானார்.
சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியைநான்பெற்றுக் கொண்டனன்
6-ம் திருமுறை 2173
திருந்தும்என் உள்ளத்திருக்கோயில் ஞான
சித்திபுரம்எனச் சத்தியம் கண்டேன்
6-ம் திருமுறை 533
என்னும் திருவாக்குகளைக் காண்க.
„அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ”
-என்பதே வள்ளலார் அருளியமகாமந்திரமாகும்.
Zrzeczenie się:
Treści zawarte w tej aplikacji są hostowane przez zewnętrzne strony internetowe i są dostępne w domenie publicznej. Nie przesyłamy żadnych dźwięków do żadnych stron internetowych ani nie modyfikujemy treści. Ta aplikacja zapewnia zorganizowany sposób wybierania utworów i słuchania ich. Ta aplikacja nie zapewnia również opcji pobierania żadnej zawartości.
Uwaga: napisz do nas, jeśli jakiekolwiek utwory, które dowiązaliśmy, są nieautoryzowane lub naruszają prawa autorskie. Ta aplikacja została stworzona z miłości do prawdziwych fanów muzyki oddania.
Ta aplikacja zapewnia tylko przesyłanie strumieniowe MP3 i nie ma funkcji pobierania, ponieważ może naruszać prawa autorskie.
What's new in the latest 1.9
Informacje Thiruvarutpa Songs APK
Stare wersje Thiruvarutpa Songs
Thiruvarutpa Songs 1.9
Thiruvarutpa Songs 1.8
Thiruvarutpa Songs 1.7
Thiruvarutpa Songs 1.4
Superszybkie i bezpieczne pobieranie za pośrednictwem aplikacji APKPure
Jedno kliknięcie, aby zainstalować pliki XAPK/APK na Androidzie!