Oписание Sri Garuda Dandakam
Шри Гаруда Дандакам из Ведантха Десики
ஸ்ரீமன் வேங்கட நாதனே நீ கவிகளின் நாயகன் வேதாந்த தத்துவங்களின் ஆசானே உன்னை என் மனதில் நிறுத்திக் கொண்டு வேண்டுகிறேன்.
மந்தார மலைகளை விரும்புகிறவனே வைகுண்ட வாசனே
மறைகளின் கடல் கடந்து அமுதத்தைக் கொண்டவனே
நாகங்களின் நாதனே உன்னைத் தாள் போற்றி
மறைகள் அனைத்திலும் உறைபவனே
பகையை முடிப்பதில் வல்லவனே
தடைகள் ஏதும் இன்றி ஸ்ரீநாரணன் உலவத் தாங்கிடும் தோளனே
திரும்பி வைகுண்டம் வந்த உடனே விரும்பி வந்து மனைவியர் அணைப்பாரே
அவர்கள் உன்னை அணைக்கும் போதிலே ரோமங்கள் அனைத்தும் திளைக்குமே முள்களைப் போல எழுந்து நின்றுவிடுமே
தேகம் எங்கனும் சூழ்ந்திடும் நாகம் முள் குத்த எழுந்திடும்
வேகமாகப் படம் எடுத்து ஆடுமே
நாகம் படம் எடுக்கும் போது நாக ரத்தினம் ஒளிருமே
ஒளிரும் அலைகள் உன் மேனியில் மிளிரும் அனைவருடைய சிந்தையைக் கவருமே கருட தேவனே உன்னை வணங்குகிறேன்.
உன் அருளை வேண்டியே வணங்குகிறேன்.
அழகு சிறகுகள் உடையவனே
உணவு பாம்பு எனக் கொண்டவனே
தேவர்கள் அமிர்தத்தை எடுத்துக் கொண்டு வந்தவனே
தேவேந்திரன் உடன் போர் செய்தவனே
இந்திரன் வீசிய ஆயுதத்தால் வந்த ரணம் எல்லாம் ஆபரணமாய் ஏற்றும் போரிலே ஜெய்த்தவனே
ஏற்றம் தனை அருளும் கருடனே
போற்றும் நாரணன் கொடியில் வீற்றுப் பெருமையைக் கொண்டவனே
காற்று வகைகள் ஐந்து வடிவினனே நாங்கள் போற்றி படிக்கிறோம் மீண்டுமே
போற்றிப் போற்றி படிக்கிறோம் மீண்டுமே
ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய கருடனே
தொடர்ந்து பூஜைகளை ஏற்பவனே அதை அதிகமாக விரும்புகிறவனே
தொடர்ந்து சிறகுகளை அசைப்பவனே
ஆசையும் சிறகுகள் அதனால் அலைகள் கடலிலே பொங்கிடுமே
பொங்கி அலை எழும்பும் ஒளியினிலே எங்கும் யானைகள் அதிருமே
சினந்து யானைகள் அனைத்தும் தாக்கவே இணைந்து வருகின்ற போதிலே
தேவர் நகங்களே ஆய்தமாய் தேவனே நீ எடுத்து அடக்கிடுவாய்
நெளிந்த பாம்பு போல புருவங்களே வளைந்த மூக்குமே பயம் தருமே
இந்திரன் போர் எடுக்கும் ஆயுதமே உந்தன் கோரைப் பல் ஆகிடுமே
உமக்குச் சேவைகள் செயும் பேரை எனக்கு அருள்வாயே பகவானே
நான் உனக்கு அடிமை ஸ்ரீ கருடா
அருமையான ஞானங்கள் எங்களுக்கு அருளிடுவாய் கருட தேவனே உன்னை வணங்குகிறேன்
அருளை வேண்டியே உன்னை வணங்குகிறேன்
திருமால் உடன் வைகுண்டத்தை இருப்பிடம் எனக் கொண்டவனே
கருட மந்திரத்தை உச்சரித்துச் சொல்வாருக்கு அருமையான பலன்களைத் தருபவனே
கோபத்தில் வால்கில்ய மஹரிஷியின் சாபத்தைப் பெற்றான் இந்திரனுமே
யாகம் செய்தாரே மஹரிஷியும்
யாகத்தில் நீயும் அவதரித்தாய்
பெரிய நாகங்கள் காலனும் நீ அரிய தத்துவங்கள் எமக்கு அருள்வாய்
சக்தி மிகும் அந்த விஷ்ணுவிற்கு பக்தி பசுவை நான் அளித்துப் பேரானந்தத்தின் பால் சுரக்க வீரா நீயும் அருளிடுவாய்
அற்ப ஆசைகள் என்கின்ற பற்று அதை அறுத்து விடுவாயே
பக்தியும், ஞானமும் தருவாயே
முக்தி அது கொடுக்கும் என்று நான் அறிவேனே
வேங்கடேசன் என்னும் தேசிகர் பாங்கு உடன் அருளிய துதி இதுவாம்
கருட தண்டகம் இதைப் படிக்க காரியம் யாவைவும் ஜெயம் ஆகும்
பகைகள் யாவைவும் விலகிடுமே எல்லா குறைகளையும் தீர்ந்திடுமே
நாராயணன் மனம் மகிழ்வாரே
நலங்கள் யாவைவும் எனக்குத் தருவாரே.
Что нового в последней версии Dandakam-gd
Информация Sri Garuda Dandakam APK

Супер Быстрая и Безопасная Загрузка через Приложение APKPure
Один клик для установки XAPK/APK файлов на Android!