இயற்கை
4.0 and up
Android OS
About இயற்கை
இயற்கையைக் காப்போம் ...! எதிர்காலத்தை வெல்வோம் ...!
இயற்கையின் நிலைத்திருப்பை பேணும் வகையில் இயற்கை சக்திகளை உரிய முறையில் பயன்படுத்தி இயற்கைசார் ஜீவராசிகளின் , தாவரங்களின் பெருக்கத்தையும் பயன்பாடுகளையும் பாதுகாப்பையும் அதிகரித்து உயிர்களின் நிலைத்திருப்பிற்கும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்விற்கும் வழிவகுத்தல்.
வீட்டுத்தோட்ட நடைமுறையை பின்பற்றவைப்பதன் மூலம் பயனாளர்கள் தமது உணவுத் தேவைக்கான செலவீனங்களைக் குறைத்துக்கொள்வதுடன் இரசாயண கலவையற்ற சுகாதாரமான மரக்கறிகளை பெறமுடியும்.
பெருவிருட்ச்ச மரங்களை நாட்டுதல் மூலம் குறித்த பிரதேசத்தில் சுத்தமான இயற்கை வாயு சுத்திகரிப்பு மூலம் சுத்தமான வாயுவை உள்ளெடுப்பதுடன் வெப்பக் கட்டுப்படுத்தல் மற்றும் மண் வளத்தைப் பேணி மக்களும் தமது தேவைக்கான பொருட்களை அவ் மரங்களிலிருந்து பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது பறவைகள் விலங்குகளும் பயன்பெறுவதுடன் அவற்றின் வாழ்விடங்களாக அவ் விருட்ச்சங்கள் அமைவதால் இயற்கை சமநிலை பேணப்படும்
மூலிகைச் செடிகளை வழங்கி மூலிகை மருத்துவத்தினை அறிமுகம் செய்வதன் மூலம் பக்கவிளைவுகள் ஏதுமில்லா மருத்துவத்தினை மக்கள் பெறுவதுடன் தமது ஆரோக்கியத்தினையும் விருத்திசெய்துகொள்ள முடியும்.
இயற்கைப் பாவனைப் பொருட்களை பயன்படுத்த வைப்பதன் மூலம் இரசாயண தாக்கங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட பண்டங்களை மக்கள் பயன்படுத்த முடியும்.
உ-ம் :- மண்சட்டிகள் , பனை ஓலைகளால் பின்னப்பட்ட பெட்டிகள் , பேப்பர் பொதிகள் , வாழை இலைகள் , பிசின் போன்றவற்றின் பயன்பாடு
இலக்கிய உருவாக்கங்கள் மூலம் இயற்கை சார் அறிவியல் , வரலாறுகள் , ஆய்வுகள் என்பன எதிர்கால சந்ததியினர் அறிவதற்கு வழிசெய்தல் .
வாழ்க்கை முறைகள் மற்றும் வழிபாட்டுமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வினையும் ஒழுக்க நெறிகளையும் மக்கள் பின்பற்றி மகிழ்ச்சியாகவும் நின்மதியாகவும் வாழ வழிவகைகளை அமைத்துக்கொடுக்க முடியும்.
அன்றாட உணவுகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் காலநிலைகளுக்கு ஏற்ப நோய்களிலிருந்து தம்மைப் பாதுகாத்து தமது உடலை ஆரோக்கியமாக பேணுவதற்கான வழிவகைகளை அமைத்துக்கொடுக்க முடியும்
இயற்கையோடு தொடர்புடைய தொழில் சார் நபர்களை ஊக்குவித்து அவர்களுக்கான உதவித்திட்டங்களை, ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் இயற்கையின் நிலைத்திருப்பையும் இயற்கைப் பொருட்களின் பயன்பாடுகளையும் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்.
இயற்கைசார் குடிசைக் கைத்தொழில்களைப் பயிற்றுவித்து அவற்றிற்கான உதவித்திட்டங்களை வழங்குவதன் மூலம் தன்னிறைவு பொருளாதார சமூகத்தை உருவாக்குவதுடன் இயற்கை உற்பத்தி பொருட்களின் அளவினையும் பயன்பாடுகளையும் அதிகரித்துக்கொள்ள முடியும்
உ-ம் :- மிளகாய் வற்றல் , நாவல்க்கோப்பி , வடகம் , சத்துமா , பப்படம் , ஜாம் , மிளகாய்த்தூள் , ஊறுகாய் , ஒடியல் , பினாட்டு போன்றவற்றின் உற்பத்தி
நீர்நிலைகளை பேணி நீர்வளத்தினைப் பாதுகாத்து நன்நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்கி நீர்சேகரிப்பு , பாதுகாப்பு செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் எதிர்கால குடிநீர் தேவையினை பூர்த்திசெய்ய வழிவகுக்க முடியும்.
இளைஞர்கள் சிறுவர்கள் மத்தியில் இயற்கைசார் அறிவியல் பயன்பாடுகள் குறித்த விளக்கங்களை வழங்கி அவர்களது ஆக்கபூர்வமான இயற்கைசார் செயற்திட்டங்களை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்கால சமுதாயத்தை இயற்கைப் பாதுகாப்பு பயனாளர்களாக உருவாக்கிக்கொள்ள முடியும்.
பாரம்பரிய உணவுமுறைகளை மீட்டெடுப்பதன் மூலம் எமது மூதாதையரின் ஆரோக்கியமான வாழ்வினை எதிர்கால சந்ததியினரும் வாழ வழிசெய்ய முடியும்
What's new in the latest 1.0
இயற்கை APK Information
Super Fast and Safe Downloading via APKPure App
One-click to install XAPK/APK files on Android!