About BATTI FM
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிபலிக்கும் விதமாக மட்டக்களப்பிலிருந்து BATTI FM
அறிமுகம்
சமுதாய வானொலி அல்லது மக்கள் வானொலி என்பது பொதுவான சமூக விடயங்களை அதிகமான ஒலிபரப்பிவரும் ஒரு சேவையாகும். இவ்வானொலியானது பிரதேச ரீதியாகவோ அல்லது மாகாண ரீதியாகவோ செயற்படும். பிரதேச சமூகமட்டங்களின் விடயப்பொருளாகவும் அவை சார்ந்த செயற்பாடுகளின் கருப்பொருளாகவும் இவைஇயங்கி வருகின்றன. இவை இணைய வழியாகவோ அல்லது பண்பலையூடாகவோ ஒலிபரப்பப் படுகின்றன.
தோற்றம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிபலிக்கும் விதமாக மட்டக்களப்பிலிருந்து சமூக வானொலியாக பற்றி எப்எம் நேரலைகளில் ஒலிபரப்பாகி வருகின்றது. இவ் இணைய வானொலியானது கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பில் ஊடகக் கல்வியூடாக நேரடியான தொழில் வாய்ப்பை வழங்கிவரும் “வொய்ஸ் ஒவ் மீடியா நெட்வேர்க்” ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தின் நிர்வாகத்தின் கீழ் இந்த இணைய வானொலி உருவாக்கப்பட்டதுடன் ஊடகக் கற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான தொழில்வாய்ப்பை வழங்கும் களமாகவும் அ10ரம்பிக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
இன்று கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் பிரதேச ஊடகங்களுக்கான இடைவெளியானது பெருமளவில் நிரப்பப்படாமல் காணப்படுகின்றது. பிரதேச ரீதியான பத்திரிகையோ வானொலியோ தொலைக்காட்சியோ இல்லாத நிலையில் பெரும்பாலான செய்தித்தளங்களே இந்த இடைவெளியை நிரப்பிவருகின்றன. அரச திணைக்களங்களோ அல்லது அரச சார்பற்ற உயர் நிறுவனங்களோ அல்லது வர்த்தக வாணிப துறைகளோ எவையாயினும் பொது மக்களுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்துவதற்கு அவைகளுக்கும் மக்களுக்குமான இடைவெளியை நிரப்புகின்ற காவிகளாக ஊடகங்கள் செயற்பட வேண்டிய தேவை இன்று அதிகரித்துக் கொண்டு போகின்றது.
இந்த அடிப்படை விடயங்களை மையமாகக் கொண்டே இணைய ரீதியான ஒரு வானொலியின் அவசியத்தின் தேவை ஆலோசிக்கப்பட்டது. அதன் பயனாக மட்டக்களப்பிலிருந்து பற்றி எவ் எம் தோற்றம்பெற்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தும் இந்த வருட இடைப்பகுதியிலிருந்தே பற்றி எப் எம் முழுவீச்சுடன் பயணிக்கத்தொடங்கியது.
ஒரு பிரதேச வானொலியாக சமூகம் சார்ந்த விடயங்களுக்கு முக்கியம் கொடுத்துவரும் பற்றி எப் எம் ஆனது கடந்து வந்த பாதைகள் கடினமானவை. பல்வேறு தடைகள் பொருளாதார சிக்கல்கள் தொழில்நுட்ப கோளாறுகள் என பலவிதமான சவால்களுக்கு முகங்கொடுத்து இன்று ஓரளவுக்கு தனது தனித்துவ பாணியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
nகொண்டிருக்கிறது. அறிவிப்பத்துறையை முழுமூச்சாகக் கொண்டு செயற்படுகின்ற இளைஞர் குழாம் இந்த இணைய வானொலியின் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.
இவ் இணைய வானொலியானது சமூக மட்டங்களின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் சடங்குகள் பெண்ணியம் நம்பிக்கைகள் விளையாட்டுக்கள் மற்றும் நாகரிக வளர்சியென பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தி வருகின்றது.
அதுமட்டுமல்லாமல் நமது பிரதேச மற்றும் சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்கள் ஆற்றுகையாளர்கள் புத்தாக்குநர்கள் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் பேராசிரியர்களென மிகப்பரந்த கலைப் பாரம்பரியத்தை வெளிக்கொணர்வதிலும் அவர்களை அழைத்து பங்கெடுப்பு உரையாடல்களிலும் ஈடுபட்டுவருகின்றது. நம்நாட்டு இசைக்கலையை ஊக்குவிப்பதுடன் நமது இசையின் வளர்ச்சிக்கும் பக்கபலமாய் செயற்பட்டு வருகின்றது.
பற்றி எப்எம் இணைய வானொலியானது மட்டக்களப்பை பிhதிநிதித்துவப் படுத்தினாலும் ஒட்டு மொத்த கிழக்கு மாகாணத்தின் ஒரு தன்னிகரில்லா இணைய வானொலியாக இன்று பரிணமித்து வருகின்றது.
பற்றி எப்எம் இணைய வானொலியானது ஒட்டு மொத்த கிழக்குமாகாண மக்களின் குரலாக இணையமூடாக உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு முகப்புத்தக பக்கங்களிலும் ஏனைய சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களுடாக எமக்கு கிடைக்கும் ஆதரவுகளே சான்று பகர்கின்றன.
இத்தகைய எமது தேசத்தின் குரலாக எமது பண்பாட்டின் அடையாளமாக இணையத்தின் ஊடாக பலகோடி தமிழ் பேசும் மக்களின் நெஞ்சங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கிழக்கின் இணைய முதல்வனாம் பற்றி எப்எம் இணைய வானொலிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் அன்பு நேயர் நெஞ்சங்களுக்கு பலகொடி நன்றிகள். தொடர்ந்தும் எமது வளர்ச்சிக்கு ஊங்கள் அன்பான ஆதரவையும் வேண்டி நிற்கின்றோம்.
பலகோடி நன்றிகளுடன்
பற்றி எப்எம் இணையவானொலி குழுமம்
What's new in the latest 1.0
BATTI FM APK Information
Old Versions of BATTI FM
BATTI FM 1.0

Super Fast and Safe Downloading via APKPure App
One-click to install XAPK/APK files on Android!