A complete Romantic and Family novel in Tamil written by MuthuMeena Murugesan.
இந்தக் கதையானது முற்றிலும் 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஒரு ஒற்றுமையான குடும்பத்தை பற்றியதாகும். தமிழ் நாட்டின் வட உள் மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் அழகு பொருந்திய கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் பேளுக்குறிச்சி கிராமமானது நம்முடைய கதையின் மையப் பகுதி ஆகும். அங்கே பாரம்பரியமிக்க கொங்கு இனத்தைச் சார்ந்த அத்தியப்பக் கவுண்டர் - நல்லம்மாள் ஆகியோரது குடும்பத்தை நோக்கி இந்த நாவலானது பயணிக்கும். இக் குடும்பத்தின் மூன்று தலைமுறை வாரிசுகளின் ஒற்றுமையைப் பற்றியும், அவர்களது குலத்தொழிலான விவசாயத்தைப் பற்றியும், இளவயது காதலைப் பற்றியும், விவசாயத்தை மேம்படுத்த அவர்கள் மேற்கொண்டுள்ள முறைகளையும், அதில் வெற்றியடையும் வழியையும் மிகுந்த எதார்த்தமாக இக்கதையில் கூறப்பட்டுள்ளது.